'மாவட்டத்தில் டெங்குவே இருக்கக் கூடாது'- அதிகாரிகளை விரட்டும் கலெக்டர்!

டெங்குக் காய்ச்சல் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் அரியலூர் மாவட்ட ஆட்சியர்.

                             

அரியலூர் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் இரவுப் பகலாக டெங்கு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பொய்யூர், சாத்தமங்கலம், வடுகப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் டெங்குக் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

                    

மாவட்டத்தில் டெங்குக் கொசுவே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெங்குக் கொசு ஒழிப்புப் பணி துரிதப்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வோர் ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டு, டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

                       

வீடு, வீடாகச் சென்று ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்குச் சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் தேக்கத்தொட்டியைப் பயன்படுத்தி வருபவர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டு, தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை அப்புறப்படுத்த ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

                   

அனைவரும் காய்ச்சல் ஏற்பட்டால் சுயவைத்தியம் செய்திடாமல், அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லியது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்களிடம் டெங்கு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடமும் இருக்கிறதா என்று மக்களிடமே நேரில் சென்று கருத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!