பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணின் கழுத்தை அறுத்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சியில் பணம் கொடுக்கல் வாங்கலில் பெண்ணின் கழுத்தை அறுத்த ஒருவர், பூட்டிய வீட்டுக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கழுத்தறுப்பு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருச்சி மறைமலையடிகள் தெருவில் வசிப்பவா் ரம்ஜான் பேகம். இவருடைய கணவர் ஹதீஷ் வெளிநாட்டில் பணியாற்றியவர். அவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். கணவரை இழந்த ரம்ஜான் பேகம், தனது தங்கையுடன் வசித்துவந்தார். இந்நிலையில், தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற தானும் வெளிநாட்டுக்குச் சென்று பணம் சம்பாதிக்க முடிவுசெய்த ரம்ஜான் பேகம், திருச்சி மார்க்கெட் பகுதியில் வசித்துவரும் மாரிமுத்து என்பவா் மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தார். அதற்காக மாரிமுத்துவிடம் 2 லட்ச ரூபாய் பணமும் ரம்ஜான் பேகம் கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிக்கொண்ட மாரிமுத்து, ரம்ஜான் பேகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப எந்தவித முயற்சியும் எடுக்காததுடன்,  பணத்தை திருப்பித்தர மறுத்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு ரம்ஜான் பேகம் தொந்தரவு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாரிமுத்து, ரம்ஜான் பேகத்தின் வீட்டுக்கு வந்து கோபமாக சத்தம்போடவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியநிலையில் ரம்ஜான் பேகத்தின் கழுத்தை, மாரிமுத்து பிளேடால் அறுத்ததாகத் தெரிகிறது. 
அக்காவின் கதறல் சத்தம் கேட்டு ஒடிவந்த ரம்ஜானின் தங்கை, அக்கம் பக்கத்தினர்களை அழைத்து சத்தம்போட்டதின் பேரில் அவா்கள் வந்து ரம்ஜான் பேகத்தைக் காப்பாற்றி மாரிமுத்துவை வீட்டுக்குள் வைத்துப் பூட்டினர். ஆனால், இதனால் தனக்குப் பிரச்னை ஏற்படும் என்பதை உணா்ந்து, மாரிமுத்து பூட்டியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு ரம்ஜான் பேகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு சோதனைக்குத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடர்பாக திருச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!