வெளியிடப்பட்ட நேரம்: 08:37 (08/11/2017)

கடைசி தொடர்பு:11:50 (08/11/2017)

மழைக் காரணமாகத் திருவாரூர் மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்டா பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில், கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவந்தது. நேற்று மாலையிலிருந்து இந்தக் கனமழை சற்றுத் தணிய ஆரம்பித்துள்ளது. இதனால், நேற்று இம்மூன்று மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகள் 7 நாள்கள் விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டன. எனினும், மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பள்ளிகள், நேற்றும் விடுமுறை அறிவித்தன. தற்போது, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலும் தென் கடலோர மாவட்டங்களிலும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்தே கனமழை பெய்துவருகிறது. இதையொட்டி, அம்மாவட்டத்தில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.