Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலின் அரசியல் பிரவேசம்: ஹெச்.ராஜா கருத்து!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பா.ஜ.க சார்பில் இன்று, 'கறுப்புப் பண எதிர்ப்பு நாள்' கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கமலின் அரசியல் பிரவேசம்குறித்து கருத்து கூறியுள்ளார்.

ராஜா

இன்று, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `நடிகர் கமல் ஹாசனுக்கு சினிமாவைத் தவிர்த்து, அரசியல் ஞானம் இல்லை. கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவரின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என்று கருத்து கூறியுள்ளார்.

நேற்று, தனது 63-வது பிறந்தநாளைக் கொண்டாடிய கமல்ஹாசன், `அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிவுசெய்திருக்கிறேன். சில ஆரம்ப கட்டப் பணிகளை மேற்கொண்டுவருவதால், அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமாகிறது. ஜனவரி மாதத்துக்குப் பின் அனைத்து அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும். எனது அரசியல் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும்' என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close