இதற்காகத்தான் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ் மொழியைக் கற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநராக இருந்த ரோசையா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. மஹாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மரணம், சசிகலா முதல்வராக முயற்சிசெய்தது, முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் களம் கண்டவர், வித்யாசாகர் ராவ். இவருக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்தப் பரபரப்புக்கு மத்தியில், மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியுள்ளார், ஆளுநர். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ் ஆசிரியர் ஒருவர் ஆளுநருக்கு தமிழ் கற்றுக்கொடுத்துவருகிறார். அழகான செம்மொழியான தமிழைக் கற்பதன்மூலம் மக்களைத் தொடர்புகொள்ள ஏதுவாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!