வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (08/11/2017)

கடைசி தொடர்பு:16:30 (08/11/2017)

கொடிகட்டிப் பறக்கும் மணல் கொள்ளை! காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

   

பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு ஓராண்டு தினத்தைக் கறுப்புத் தினமாக அறிவித்து இன்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு இதே நாளில் 500 மற்றும்1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது. இந்தத் திடீர் அறிவிப்பால் திண்டாடியது பொதுமக்கள் சிறுவியாபாரிகள் என நடுத்தர மக்கள் ரொம்பவே சிரமப்பட்டார்கள்.

பணமதிப்பிழப்பு நடந்து ஓராண்டானாலும் இன்னும் மக்கள் சிரமப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் மற்றும் காரைக்குடி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசாமி ஆகியோர் பேசும்போது “இந்த மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதற்கு ஆளும்கட்சி அமைச்சர்கள் கல்லூரணி அருகே மிகப்பெரிய அளவில் சவடு மண் அள்ளுவதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு திருட்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது  கலெக்டர், எஸ்.பி என எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படிப்பட்ட நிர்வாகம் சிவகங்கையில் நடக்கிறது. இந்த மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பால் இன்றைக்கு சாதாரண வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரைக்கும் பாதிப்படைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் மத்திய அரசும் மாநில அரசும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டும்" என்று பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுப.வீ திமுக நகர் செயலாளளர் துரை ஆனந்த் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் முன்னாள் அமைச்சர் தென்னவன் போன்றவர்கள் கலந்துகொண்டார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க