மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் பிறந்தநாள் விழா கொண்டாடிய அத்வானி!

advani

இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானியின் 90 வது பிறந்தநாள் இன்று. அவருக்குப் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.  

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் அத்வானிக்கு வாழ்த்து செய்தி பதிந்துள்ளார். அதில், அத்வானி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், அவர் இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் அத்வானி தனது 90 வது பிறந்த நாளின் சிறப்பு விருந்தினர்களாக 90 பார்வை சவால் கொண்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளைத் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். புது டெல்லி லோதி ரோடு பார்வையற்றோர் பள்ளியிலிருந்து குழந்தைகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். வீட்டின் வரவேற்பரையில் குழந்தைகளோடு சேர்ந்து பிறந்தநாளைக் கொண்டாடினார். 

இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, அத்வானி துணைப் பிரதமராகப் பதவி வகித்தார். உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளிலும் அத்வானி பணியாற்றியவர். 2015-ம் ஆண்டு, பத்ம விபூஷன் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!