வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (12/11/2017)

கடைசி தொடர்பு:19:13 (12/11/2017)

பணமதிப்பிழப்பு பற்றி குடும்பத்தலைவிகள் என்ன சொல்கிறார்கள்?

டீமானிடைசேஷன்

டீமானிடைசேஷன்... 

இந்த ஒரு வார்த்தைதான் கடந்த ஆண்டு இதே நாளில் இந்தியாவையே அலறவைத்தது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பில் கலங்கிப்போனார்கள். கணவருக்குத் தெரியாமல் கடுகு டப்பாவிலும், பூஜை அறையிலும் சேர்த்துவைத்த கையிருப்புகளை எடுத்துக் காண்பித்து, கணவரிடமும் திட்டு வாங்கி, வங்கி வரிசையிலும் நின்று நொந்துபோன நாள். இதோ, இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்போது, நம் இல்லத்தரசிகளின் மனநிலை என்ன? சில பெண்களிடம் கேட்டோம்... 

 

கிரேஸ், (அரசு ஊழியை, சென்னை) 

“, அந்த நாளை மறுபடியும் ஞாபகப்படுத்திட்டீங்களே... எங்க வீட்டுக்காரருக்கும் எனக்கும் இருந்த ஹாபிதான், எங்களை கிரேஸ் - டீமானிடைசேஷன்டீமானிடைசேஷன் காப்பாத்துச்சு. ரெண்டு பேருமே 100 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய்னு, புதுசா மொட மொடப்பா இருக்கும் நோட்டுகளைச் செலவழிக்காமல் எடுத்துவெப்போம். அப்படி ஹாபியா எடுத்துவெச்ச பணத்தில்தான் பால் பாக்கெட், பேப்பர், மார்க்கெட் செலவு எனச் சமாளிச்சோம். நல்லவேளையா 500, 1000 ரூபாய் நோட்டுகளை எடுத்துவெச்சுக்கிற அளவுக்கு வசதியில்லை. அந்த நாளுக்கு அப்புறம் இன்னிக்குவரை எந்தப் புது ரூபா நோட்டையும் ஹாபியாகூட எடுத்துவைக்கிறதில்லை.'' 

 

அனிதா பிரகாஷ், (வங்கி ஊழியை, சென்னை) 

அனிதா - டீமானிடைசேஷன்“ஹஸ்பெண்டுக்குத் தெரியாமல் கடுகு டப்பாவிலோ, பீரோவில் துணிகளுக்கு நடுவிலோ ஒளிச்சுவைக்கும் பழக்கம் என்கிட்ட கிடையாது. ஸோ, அந்த வகையில் எந்தக் கஷ்டமும் படலை. ஆனா, ஒரு பேங்க் எம்ப்ளாயியா ரொம்ப அவஸ்தைப்பட்டேன். டீமானிடைசேஷன் சமயத்தில் நான் நிறைமாத கர்ப்பிணி. 6 மணி முடிஞ்சும் வேலை, நைட் ஒன்பது மணி வரைக்கும் இருக்கும். சனி, ஞாயிறு லீவெல்லாம் கிடையாது. சீட்டை விட்டு எழுந்து ரெஸ்ட் ரூம் போகக்கூட முடியாத சூழல். ஆனாலும், பொதுமக்களுக்கு சர்வீஸ் பண்ண கிடைச்ச ஒரு வாய்ப்பாக நினைச்சு செய்தேன்.'' 

 

கவிதா, (இல்லத்தரசி, காஞ்சிபுரம்) 

“அந்த நாள் ராத்திரி என் பையன் ரொம்ப டென்ஷனா இருந்தான். அவன் ஃபிரெண்ட்ஸ்களுக்கு போன் போட்டு கவிதா - டீமானிடைசேஷன்பேசிட்டிருந்தான். என்ன ஆச்சு இப்புடி புலம்பிட்டிருக்கேனு கேட்டேன். விஷயத்தைச் சொன்னதும், எனக்கும் டென்ஷன் தொத்திக்கிச்சு. டி.வி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என எங்கே பார்த்தாலும் 500, 1000 ரூபா பேச்சுத்தான். எப்பவுமே நான் என் வீட்டுக்காரருக்கும் பசங்களுக்கும் தெரியாம பணத்தை அங்கே இங்கேனு ஒளிச்சுவெச்சது கிடையாது. ஆனாலும், அடுத்த நாள் செலவுக்கு வெச்சிருந்த பணத்தையே மாற்ற முடியாமல் தவிச்சோம். அதுக்காக தேவைகளை ரொம்பவே சுருக்கிக்கிட்டோம். என் மாமனார், என் பசங்களுக்காகக் கொஞ்சம் பணம் கொடுத்திருந்தார். அதை மட்டும் இப்போ வரை சென்ட்டிமென்டுக்காக மாத்தாம அப்படியே வெச்சிருக்கோம்'' 

 

பியுலா ஜோசப், (குடும்பத் தலைவி, திருச்சி) 

பியுலா - டீமானிடைசேஷன்“ஓவர் நைட்ல பிச்சைக்காரங்களா ஆயிட்டோம். அவருக்குத் தெரியாமல் கடுகு டப்பா, உளுந்து டப்பாவில் சேத்துவெச்சிருந்த 500 ரூபாய் நோட்டுகள் எல்லாம் ஒரே நாளில் வெளியில் வந்துடுச்சு. வழக்கமா, இப்படிச் சேர்த்துவைக்கும் பணத்தை, ஒரு அவசரத்துக்காகக் கொடுக்கும்போது, என் வீட்டுக்காரர் முகத்தில் சந்தோஷம் தெரியும். ஆனா, அந்தப் பத்து நாளில் நான் கொடுத்த 500, 1000 ரூபா நோட்டுகளைப் பார்த்து அவர் முகம் போன போக்கு இருக்கே... கடுகு போட்டா வெடிச்சிருக்கும். அவ்ளோ கடுப்பாயிட்டாரு. பேங்க் வாசல்ல க்யூவில் நின்னு தேய்ஞ்சுப்போனோம். தினசரி செலவுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டோம். தெரிஞ்ச மளிகைக் கடையிலேயே மளிகைச் சாமான்களைத் தரத் தயங்கினாங்க. என் பிள்ளைக்குக் காய்ச்சல் வந்து, டாக்டருக்குக் கொடுக்கவும் பணமில்லாமல் கையைப் பிசைஞ்சதை மறக்கவே முடியாது. இப்போ, கடுகு டப்பாவில் காசு சேமிக்கும் பழக்கத்தை சுத்தமா விட்டுட்டேன்.'' 

 


டிரெண்டிங் @ விகடன்