’புள்ளி விவரங்களின்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன’ - பணமதிப்பிழப்பு விவகாரத்தில் வானதி சீனிவாசன் பதில் | Vanathi Srinivasan speaks about benefits of demonetisation

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (09/11/2017)

கடைசி தொடர்பு:08:26 (09/11/2017)

’புள்ளி விவரங்களின்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன’ - பணமதிப்பிழப்பு விவகாரத்தில் வானதி சீனிவாசன் பதில்

பணமதிப்பிழப்பு விவகாரம்குறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த, பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர், வானதி சீனிவாசன், "பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, நாட்டில் சந்தேகத்துக்கிடமான 17.7 லட்சம் பணப்பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன. 1,626 ரூபாய் கோடி பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

வானதி

 

காஷ்மீரில் கல்லெறியும் சம்பவங்களின் எண்ணிக்கை 75 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 7.62 லட்சம் எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.  2.24 லட்சம் போலி நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனை 50 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பழகிக்கொண்டிருக்கிறார்கள். பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய இரண்டிலுமே மக்களின் கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்ற முயன்றோம். தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக பா.ஜ.க நிறைவேற்றிவருகிறது.

தேர்தல் அறிக்கையில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதுதான் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று கூறினோம். அதைச் செய்து காட்டியுள்ளோம். ஆனால், எதிர்க்கட்சிகள் புள்ளி விவரங்களின்றி எங்களைக் குற்றம்சாட்டி வருகின்றன. புள்ளி விவரங்களுடன் எதிர்க்கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு நாங்கள் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம்’ என்றார்.