Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திவாகரன் வீட்டில் 4 மணி நேரமாக ஐ.டி ரெய்டு..!

சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில், இன்று அதிகாலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

திவாகரன்

சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலையிலிருந்தே சோதனை நடத்திவருகின்றனர். இந்நிலையில், திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கலைக் கல்லூரியில் இன்று அதிகாலையிலிருந்து வருமான வரித்துறை சோதனை நடத்திக்கொண்டிருக்கிறது. அதேபோல, தினகரன் அணி மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், திவாகரன் உதவியாளர்கள் ராசுப்பிள்ளை, சுஜய் ஆகியோர் வீடுகளிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை உள்ளே புகுந்து தீவர சோதனையில் ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தவரும் ஐ.டி ரெய்டுக்கு திவாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துவருகின்றனர். இந்நிலையில், திவாகரன் வீட்டுக்கு முன், அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement