வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (09/11/2017)

கடைசி தொடர்பு:10:20 (09/11/2017)

சேகர் ரெட்டி விவகாரத்தில் சுணக்கம் ஏன்? தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

”சசிகலா மற்றும் அவர் தொடர்புடைய அத்தனை இடங்களிலும் நடக்கும் வருமான வரித்துறை சோதனை, கறுப்புப்பண நடவடிக்கை என்றால், சேகர் ரெட்டி விவகாரத்தில் சுணக்கம் காட்டியது ஏன்?” என தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கத் தமிழ்ச்செல்வன்

சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலையிலிருந்தே சோதனை நடத்திவருகின்றனர். இந்நிலையில், திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கலைக் கல்லூரியில் இன்று அதிகாலையிலிருந்து வருமான வரித்துறை சோதனை நடத்திக்கொண்டிருக்கிறது. அதேபோல, தினகரன் அணி மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், திவாகரனின் உதவியாளர்கள் ராசுப்பிள்ளை, சுஜய் ஆகியோர் வீடுகளிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை உள்ளே புகுந்து தீவர சோதனையில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு மற்றும் டெல்லி என மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. 

இந்நிலையில், இந்த வருமான வரித்துறை சோதனைகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், “கருப்புப்பண நடவடிக்கை என்றால், சேகர் ரெட்டி மீதான நடவடிக்கையில் சுணக்கம் ஏன்? சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம் பெற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.