போலி டாக்டர்களைக் களையெடுக்கும் கலெக்டர்!

'போலி ஆயுர்வேத மருத்துவர்களைப் பிடிப்பதற்கு முன், மாவட்ட சித்தமருத்துவ அலுவலருடன் கலந்து ஆலோசித்துவிட்டுதான் பிடிக்க வேண்டும்' என மருத்துவத்துறை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் லதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலி டாக்டர்களைப் பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் விஜயன் மதமடக்கிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவால், அவசர அவசரமாக போலி டாக்டர்களைப் பிடிக்கப் போன இணை இயக்குனர், ஹோமியோபதி டாக்டரை போலி டாக்டர் என கைதுசெய்து சிறையில் அடைத்ததால், அந்த  விவகாரம் பூதாகரமாக தற்போது கிளம்பியுள்ளது.

இடைக்காட்டூரைச் சேர்ந்தவர் டாக்டர் பாண்டீஸ்வரி. இவர், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி படித்தவர் என்று ஆயுர்வேத மருத்துவர்களின் மாநிலத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதன் விளைவாக, மாவட்ட ஆட்சியர் லதா சுற்றறிக்கை ஒன்றை இணை இயக்குநர் விஜயன் மதமடக்கிக்கு அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில்,”சித்தா, யுனானி, ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி முறையில் தேர்ச்சிபெற்று முறையாக பட்டம் பெற்று மருத்துவம் செய்யும் மருத்துவர்கள்மீது எந்தவித குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் .மேலும், போலி மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்போது, மாவட்ட சித்த மருத்துவ அலுவலருடன் இணைந்து  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''  என்று சொல்லப்பட்டிருப்பது ஆயுஷ் மருத்துவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!