ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் மும்பைக்கு இன்று 500வது மேட்ச்!

மும்பை கிரிக்கெட் அணி இன்று ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது 500வது போட்டியில் விளையாடியது.

ranji trophy


மும்பை அணியின் கேப்டன் ஆதித்ய தாரே கூறும்போது, “இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான தருணம்” என்றார். 500வது போட்டியில் இந்திய அணிக்கு விளையாடிய ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் மும்பைக்காக களம் இறங்கினார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் பெருந்தலைகளாக விளங்கிய சுனில் கவாஸ்கர், திலீப் வெங்கர்சர்க்கார், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மும்பை அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஆனால், 500வது போட்டி மும்பை அணிக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக அமையவில்லை. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மும்பை அணி 41 முறை ரஞ்சிக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!