வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (09/11/2017)

கடைசி தொடர்பு:18:45 (09/11/2017)

செல்வாக்கானவர் யார்? ; மோதிக்கொள்ளும் செல்லூர் ராஜு- ஆர்.பி.உதயகுமார்

செல்லூர்ராஜுவுக்கும் ஆர்.பி.உதயகுமாருக்கும் இடையே, செல்வாக்கானவர் யார் என்பதில் கடுமையான போட்டி நடந்து வருகிறது. இவர்களின் போட்டியால் தொண்டர்கள் மிகவும் நொந்துபோகின்றனர்.

விருதுநகர் மாவட்ட அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் இந்தமுறை மதுரை மாவட்ட அமைச்சரானதும் அமைச்சர் செல்லூர்ராஜூ ஆரம்பத்தில் அடக்கி வைத்தார். உடனே சுதாரித்த உதயகுமார், ராஜுக்கு எதிரான புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவுடன் இணைந்துகொண்டு, செல்லூர்ராஜூக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். எடப்பாடிக்கும் தனக்கும் எவ்வளவு நெருக்கம் என்பதை காட்டுவதில் ஆர்.பி.உதயகுமார் திட்டமிட்டு பல வேலைகளைச் செய்து வருகிறார். 

செல்லூர்ராஜு


மதுரையில் உலகத் தமிழ்சங்கத்தை திறக்க எடப்பாடி வந்தபோது, அவருக்காகப் பாண்டி கோயிலருகே இளைஞர்விழா நடத்திய உதயகுமார், அதன் பின்பு மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா தொடங்கியபோது, அதிலும் தனியாகக் காட்டிக்கொண்டார். அடுத்து, நெல்லையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்குச் சென்ற எடப்பாடியை தன்னுடைய திருமங்கலம் தொகுதியில் கல்லூரி திறப்புவிழாவை நடத்தி அதகளப்படுத்தினார். அடுத்து சிவகாசி விழாவுக்கு இதே வழியில் எடப்பாடி சென்றபோதும், திருமங்கலம் நகருக்குள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்து தேவர்சிலைக்கு மாலை போட வைத்து தன்னைப் பிரபலப்படுத்திக்கொண்டார்.

அக்டோபர் மாதம் தேவர் ஜெயந்திக்காகப் பசும்பொன் சென்ற எடப்பாடியை,  திருமங்கலம் வழியாக வரவைத்து மீண்டும் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தார். இந்நிலையில்தான் இன்று தேனி நிகழ்ச்சிக்காக மதுரை வழியாகச் சென்ற எடப்பாடிக்கு செக்கானூரணி, உசிலம்பட்டியில் பிரமாண்ட  வரவேற்பு கொடுத்து அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை போட வைத்து தன் இருப்பை முதல்வருக்குக் காட்டிக்கொண்டார் உதயகுமார். இதனால், மதுரை மாநகரச் செயலாளரும், அமைச்சருமான செல்லூர்ராஜுவை டம்மியாக்குவதாக ஆதரவாளர்கள் புலம்பி வருகிறார்கள். இதற்கு விரைவில் செல்லூர்ராஜூ தன்னுடைய பாணியில் உதயகுமாருக்கு பதிலடி கொடுப்பார் என்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க