பிரபல ஒளிப்பதிவாளர் பிரியன் காலமானார்..!

'பொற்காலம்' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமான பிரியன், 'ஆனந்த பூங்காற்றே', 'மஜ்னு', 'வல்லவன்', 'ஆறு' எனப் பல படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்திருக்கிறார். மேலும், ஹரியின் 'சிங்கம்' படத்தின் மூன்று பாகத்துக்கும் ஒளிப்பதிவாளராகயிருந்தவர் பிரியன். 

ஒளிப்பதிவாளர் ப்ரியன்

சிங்கம் 3 படத்திற்கு பிறகு ஹரி தற்போது சாமி 2 படத்திற்கும் பிரியன்தான் ஒளிப்பதிவாளர். விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், மாரடைப்பு காரணமாக ஒளிப்பதிவாளர் பிரியன் காலமானார். இவரது இறப்புக்குத் தமிழ் சினிமாவில் இருக்கும் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் வேளையில், பிரியனின் உடல் அவரது சொந்த ஊரான விருதுநகருக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!