நானும், பன்னீர்செல்வமும் இரட்டைக் குழல் துப்பாக்கி! நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேச்சு

கடுமையான வறட்சி வந்தாலும், மழை பெய்து கணுக்கால் அளவு தண்ணீர் வந்தாலும் ஆட்சி கலைக்கப்படும் என்கிறார் ஸ்டாலின் என எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா மேடையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடம் என்றுசொல்லி சில இடங்களைப் பார்க்கிறார். பேட்டி கொடுக்கிறார். அரசைப்பற்றி விமர்சனம் செய்கிறார்.

நாங்கள் கேட்கிறோம், ஐந்து ஆண்டுகாலம் சென்னை மேயராக இருந்தாரே, ஐந்து ஆண்டுகாலம் உள்ளாட்சி அமைச்சராக இருந்தாரே. அப்போது சென்னை பற்றி சிந்திக்கவில்லையா? இப்போதுதான் ஞானம் வந்ததா? அன்று சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது இன்று போல சுற்றிச்சுற்றி வந்து வேலை செய்திருந்தால் இப்படி ஒரு பாதிப்பு வந்திருக்குமா? எல்லாம் அவர் செய்துவிட்டு எங்களைக் குறை சொல்கிறார். ஆனால், நாங்கள் வடிகால்வசதி குறித்து நல்லதொரு திட்டம் தீட்டி இனி எந்தப் பிரச்னையும் நடக்காதவாறு செய்திருக்கிறோம். அவரைப்போல சும்மா இருந்துகொண்டு இன்று வந்து எங்கள் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று சொல்கிறார். எனவே, ஏதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போல வெற்றுக்கூச்சல் போடுபவர்கள் நாங்கள் இல்லை. நானும், பன்னீர்செல்வமும் இரட்டைக் குழல் துப்பாக்கி" என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!