வெளியிடப்பட்ட நேரம்: 05:20 (10/11/2017)

கடைசி தொடர்பு:08:00 (10/11/2017)

இறந்து ஒரு வாரத்துக்குப் பிறகு அழுகிய நிலையில் யானை மீட்பு!

கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வளையங்குட்டை என்கிற வனப்பகுதியில் 50-வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்துகிடந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதி யானைகளின் புகலிடம். வலைசைப்பாதைகள் நிறைந்த வனப் பகுதி. கடந்த இரண்டு ஆண்டுகளில் யானைகள் இறப்பு இந்தப் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால், யானை நேசர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை  அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று ஒரு யானை இறந்துள்ளது. மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆலாந்துறை அடுத்துள்ள வளையங்குட்டை வனப்பகுதியில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை மருத்துவர் மனோகரன் மற்றும் வனவர் செந்தில்குமார் அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அந்த யானை உடல்நலக்குறைவால் இறந்திருக்கிறது. அழுகிய நிலையில் இருப்பதை வைத்துப் பார்க்கும்போது இந்த யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். பிரதே பரிசோதனைக்குப்  பின்னர் அந்தப் பகுதியிலேயே யானையைப் புதைக்கவிருப்பதாகத் தெரிவித்தனர்.