ஜி.எஸ்.டி வசனங்கள் மியூட் செய்யப்பட்டு ரிலீஸான தெலுங்கு 'மெர்சல்'..!

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 100 வது படமான இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்த 'மெர்சல்' படம் தீபாவளியன்று வெளியானது.

மெர்சல்

அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தக் காட்சிகளை நீக்க வேண்டியதில்லை என்று கூறி நாடு முழுவதுமிருந்து படக்குழுவுக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்தன. பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கியத் தலைவர்கள் பா.ஜ.க-வின் இது மாதிரியான செயல், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனக் கூறினர். இந்நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷனான  'அதிரிந்தி' படம், தமிழில் இருந்ததைப் போலவே யு/ஏ சான்றிதழுடன் சற்று தாமதாக ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் நவம்பர் 9-ம் தேதி வெளிவந்தது. இந்நிலையில், பல விமர்சனங்களுக்கு உட்பட்ட டிஜிட்டல் இந்தியா பற்றி வடிவேலு பேசும் வசனம், ஜி.எஸ்.டி பற்றி விஜய் பேசும் வசனம் ஆகியன மியூட் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!