வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (10/11/2017)

கடைசி தொடர்பு:09:00 (10/11/2017)

’சந்தேகம் உள்ளவர்கள் மீது வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்’: தமிழிசை

"யார் மீது சந்தேகம் உள்ளதோ அவர்கள் மீது வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்” என பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் நேற்று அதிகாலை 4 மணியிலிருந்து இரண்டாம் நாளான இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் எனக் கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை இன்னும் நடந்து வருகிறது. இது தவிர ஹைதராபாத், பெங்களூர், டெல்லி என 82 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த வருமான வரிச்சோதனைகுறித்து பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறுகையில், “வருமான வரி சோதனைக்கும், அரசியல் மாற்றத்துக்கும் முடிச்சு போடுவது தேவையற்றது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டவர்கள் வருமான வரி சோதனைக்கு உள்ளாகும்போது அதை வரவேற்க வேண்டும். யார் மீது சந்தேகம் உள்ளதோ அவர்கள் மீது தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.