அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மாேதி முதியவர் பலி! | Minister escord vehicle met accident, 1 killed

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (10/11/2017)

கடைசி தொடர்பு:13:36 (10/11/2017)

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மாேதி முதியவர் பலி!

accident

மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை மற்றும் பாேக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியாேருக்கு பாதுகாப்புக்குச் சென்ற பாேலீஸ் எஸ்கார்டு வாகனம் மாேதி லெட்சுமணன் என்ற முதியவர் பலியானார்.

vijaya baskar
 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாத இலவச லேப்டாப்களை வழங்கும் விழாவில் கலந்துகாெள்ள தம்பிதுரையும், எம்.ஆர். விஜயபாஸ்கரும் இன்று சென்றனர். அப்பாேது அரவக்குறிச்சிக்கு முன்னால் சாலை ஓரம் நின்ற லெட்சுமணன்மீது அமைச்சரின் எஸ்கார்டு வாகனம் பலமாக மாேத, தூக்கி எறியப்பட்ட லெட்சுமணன் துடிதுடித்துப் பலியானார். 'பாேக்குவரத்து அமைச்சரின் எஸ்கார்டு வாகனமே விபத்தை ஏற்படுத்திவிட்டது. இதுதான் இங்கு பாேக்குவரத்து நடக்கும் லட்சணம்' என்று பாெருமுகிறார்கள் பகுதி மக்கள்.