கல்யாணமான நாளே குழந்தை எங்கே என்று கேட்கலாமா? - ஹெச்.ராஜா அடடே கேள்வி

சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து நடந்துவரும் வருமான வரித்துறை சோதனைகளால் ஏற்பட்ட பலன் என்ன என்ற கேள்விக்கு, “கல்யாணம் ஆன நாளே குழந்தை எங்கே என்று கேட்கலாமா?” என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச் .ராஜா பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.

h.raja


டி.டி.வி. தினகரன், ம.நடராசன், திவாகரன், இளவரசி, விவேக் உட்பட சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து 187 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். பல இடங்களில் இன்றும் சோதனை தொடர்ந்துவருகிறது.

இந்தச் சோதனைக்குப்பின்னால் மத்திய அரசு இருப்பதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டி இருந்தார். “கன்னித்தீவு போல சோதனைகள் தொடர்கின்றன. ஆனால், அவற்றால் விளைந்த பலன் என்னவெனத் தெரியவில்லை" என்று தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.  

இதேபோல் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை விமர்சித்திருந்தனர். அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வருமான வரித்துறை சோதனையால் விளைந்த பலன் என்ன? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த ட்வீட்டை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பா.ஜ.க தேசியத்தலைவர் ஹெச்.ராஜா, “கல்யாணம் ஆன நாளே குழந்தை எங்கே என்று கேட்கலாமா?” என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!