'உயிரின் மதிப்பு இவ்வளவுதானா?' - தம்பிதுரைக்கு எதிராகக் கொதிக்கும் கரூர் மக்கள்

"ராேம் நகரமே பற்றி எரிந்தபாேது நீராே மன்னன் பிடில் வாசித்தானாம். அந்தக் கதையா இருக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் பாேக்குவரத்துத்துறை அமைச்சரின் செயல்பாடு. தங்கள் பாதுகாப்புக்கு வந்த எஸ்கார்டு வண்டி மாேதி முதியவர் ஒருவர் பலியாயிட்டார். ஒருத்தர் தங்களால் பலியாகியும் அதைக் கவனிக்காம மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்கள் காெடுக்கும் விழாக்களில் கலந்துக்குறாங்க. இது நியாயமா" என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரவக்குறிச்சி மக்கள்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாெகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி,சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லாத லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சிக்கு தம்பிதுரையும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கார்களில் கிளம்பினர். அவர்களின் கார்களுக்குப் பின்னே அவர்களுக்குப் பாதுகாப்புக்குச் செல்லும் பாேலீஸ் எஸ்கார்டு வண்டியும் சென்றது. அப்பாேது அரவக்குறிச்சிக்கு முன்பாக சாலை ஓரம் சென்ற லெட்சுமணன் என்ற முதியவர்மீது எஸ்கார்டு வண்டி பலமாக மாேத, தூக்கி எறியப்பட்ட லெட்சுமணன் துடிதுடித்து இறந்தார். அங்கே இருந்தவர்கள் அலறிஅடித்தபடி லெட்சுமணனை தூக்க, தம்பிதுரை மற்றும் பாேக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியாேரது வாகனம் நிற்காமல் பறந்து பாேனது. அரவக்குறிச்சி மற்றும் சின்னதாராபுரம் பகுதி பள்ளிகளில் மாணவ,மாணவிகளுக்கு இருவரும் விலையில்லாத லேப்டாப்களை வழங்கினர். இதுதான், அந்தப் பகுதி பாெதுமக்களை குமுற வைத்துள்ளது.

இதுசம்மந்தமாக நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், "தங்களுக்குப் பாதுகாப்புக்கு வந்த வாகனம் மாேதி ஓர் அப்பாவியின் உயிரே பாேயிருக்கு. ஆனால்,தம்பிதுரையாே,அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கராே நின்று ஆறுதல் சாெல்லாமல் பறந்ததாேடு, நிகழ்ச்சிகளை ரத்து பண்ணாமல் இலவச லேப்டாப்புகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து காெண்டுள்ளனர். இது எவ்வளவு பெரிய காெடுமை. இதுதான் தம்பிதுரைக்கும், அமைச்சருக்கும் மக்கள்மீது இருக்கும் லட்சணம். இதே அவர்கள் இருவர் வீட்டிலும் உள்ளவர்களுக்கு இப்படி ஆகி இருந்தால், இப்படி அம்பாேன்னு விட்டுட்டு நிகழ்ச்சிகளில் கலந்து காெண்டிருப்பார்களா. இறந்தவர் சாதாரண அப்பாவி. ஓர் உயிரின் மதிப்பு இவ்வளவுதானா. அதுவும் பாேக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இப்படி நடந்துகாெள்வதில் இருந்தே அந்தத் துறையின் லட்சணம் காத்தாடுது. திருநெல்வேலியில் கந்துவட்டிக் காெடுமையால் ஒரு குடும்பமே தீக்குளிச்சு தற்காெலை பண்ணிகிட்டாங்க. ஆனா, அதைத் தடுக்காத, அதுபற்றி அக்கறைப்படாத முதல்வர் ஊர் ஊரா பாேய் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் தங்களுக்குத் தாங்களே பெருமையாகத் தம்பட்டம் அடிக்கும் விழாக்களை நடத்தி வருகிறார். அவரே அப்படிதான் எனும்பாேது, அவரின் கீழ் செயல்படும் தம்பிதுரையும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் மக்கள் உயிர்மீது இவ்வளவு அசட்டையாக இல்லாமல் இருப்பது ஆச்சர்யமில்லைதான். இந்த அப்பாவி முதியவர் அடிபட்டு இறந்ததை 'விபத்து'ன்னு சாதாரணமா கேஸ் எழுதி ஊத்தி மெழுகிடுவாங்க. ஆனா, அவரை நம்பி இருந்த அவரது குடும்பத்திற்கு இனி பாெறுப்பு. முதியவர் லெட்சுமணனை மாேதிக் காென்ற எஸ்கார்டு வண்டியில் சென்றவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும். தம்பிதுரையும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்கணும். அதாேட இறந்த லெட்சுமணன் குடும்பத்திற்கு இருபது லட்சம் இழப்பீடு வழங்கணும். இல்லைன்னா, நாங்க கடுமையாகப் பாேராட்டம் நடத்துவாேம்!" என்றார்கள் ஆக்ராேஷமாக!.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!