வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (10/11/2017)

கடைசி தொடர்பு:16:05 (10/11/2017)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசித் தேரோட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் ஐப்பசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

அம்மன் கோயில்

மதுரையில் மீனாட்சி அம்மன் அரசாட்சி செய்வதைப்போல, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் அம்பாளே அரசாட்சி   செய்துவருகிறாள். கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஐப்பசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 13-ம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமி - அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரதீபாராதனை நடைபெற்றது. பிறகு,  செண்பகவல்லி அம்பாள் – பூவனநாதசுவாமி திருத்தேரில் எழுந்தருளி காட்சியளிக்க, விசேஷ தீபாராதனை நடைபெற்றது.  ‘’ ஓம் நமச்சிவாய.. சிவாய நம ஓம்..’’ என்ற கோஷத்துடன் பக்தர்கள்  வடம் பிடித்துத் தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது திருத்தேர்.

kovilpatti senpagavalli amman kovil festival

11-ம் நாள் திருவிழா, வரும் 12-ம் தேதி மதியம் 1 மணிக்கு செண்பகவல்லி அம்பாள் தபசு சப்பரத்தில் எழுந்தருள்கிறார். மாலை 6 மணிக்கு சுவாமி பூவனநாதர், ரிஷப வாகனத்தில் அம்பாளுக்கு தபசுக்காட்சி அளிக்கும் வைபவம் நடக்கிறது. 12-ம் நாள் திருவிழா, வரும் 13-ம் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்பாள் வீதியுலா வருதலும், இரவு 7 மணிக்கு சுவாமி – அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

kovilpatti senpagavalli amman kovil festival

 சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டினப் பிரவேசம் செல்லும் நிகழ்ச்சியுடன் ஐப்பசித் திருவிழா நிறைவு பெறும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க