மு.க.ஸ்டாலினுக்கு சவால்விடும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் | O.S.Maniyan challenges M.K.Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (10/11/2017)

கடைசி தொடர்பு:18:10 (10/11/2017)

மு.க.ஸ்டாலினுக்கு சவால்விடும் அமைச்சர் ஓ.எஸ். மணியன்

'நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள வண்டல்-அவுரிக்காடு இணைப்புப் பாலம், அ.தி.மு.க ஆட்சியில்தான் கட்டப்பட்டது. அதற்கான அரசாணை என் வசம் உள்ளது' என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், மு.க. ஸ்டாலின் பேச்சுக்குப் பதிலடி தந்துள்ளார்.  

கடந்த நவம்பர் 8-ம் தேதி, வேதாரண்யம் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தி.மு.க செயல் தலைவர் பார்வையிட்டார்.  அதன்பிறகு,  'வண்டல்-அவுரிக்காடு பாலம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.  ஆனால், அமைச்சர் ஓ.எஸ். மணியன் அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாகப் பொய் சொல்கிறார்' என்று குறிப்பிட்டார்.  

ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.  நாகை மற்றும் திருமருகலில் மழைநீர் பாதித்த பகுதிகளைச் சுற்றிப்பார்த்த ஓ.எஸ். மணியன், அதன்பின் பேட்டியளித்தார்.  அப்போது, ''வேதாரண்யத்தை அடுத்துள்ள வண்டல்-அவுரிக்காடு இணைப்புப் பாலம் அ.தி.மு.க. அட்சியில்தான் கட்டப்பட்டது.  அதற்கான அரசாணை என்னிடம் உள்ளது.  சட்டமன்றத்தில் ஸ்டாலின் முன் காட்டவும் தயாராக இருக்கிறேன்.  
 
ஜுன் மாதத்தில் திறக்கப்படவேண்டிய மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததால், காலதாமதமாகத் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  இதனால், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகிவிட்டன.  நஞ்சைப் பயிர்கள் பாதிக்கப்பட்டது உண்மைதான்.  பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க, முதல்வரிடம் பேசி உறுதிசெய்துள்ளோம்.  விரைவில் உரிய பரிகாரம் செய்யப்படும்.  அதுபோல, மத்திய அரசு எங்கள் பேச்சைக் கேட்டுத்தான் செயல்படுகிறது என்கிறார்கள்.  அது உண்மையென்றால், காவிரி நீர் பிரச்னை, முல்லைப்பெரியாறு அணை பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை என எல்லா பிரச்சனைகளையும் முடித்திருக்கலாமே. வருமான வரித்துறை சோதனை, மத்திய அரசின் நடவடிக்கை.  அதுகுறித்து எங்களிடம் கேள்வி கேட்க வேண்டாம்'' என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க