சோப்பு போட்டு குளித்தால் 6 மாதம் சிறை! அதிரடி காட்டிய கேரளா!

கார்த்திகை தொடங்கினால் ஐயப்ப பக்தர்கள் மாலை போடுவது வழக்கம். ஐயப்பனுக்கு விரதம் இருந்து, இருமுடிகட்டி கேளராவில் உள்ள சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், அங்கே புனித நீராடுவது வழக்கம். பம்பை ஆற்றில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கை.

சபரிமலை

ஐயப்ப பக்தர்கள் குளிக்கும் போது, சோப்பு, ஷாம்பு, சியக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். சிலர் சாப்பிட்ட இலைகளை ஆற்றில் வீசுகின்றனர். இதனால் பம்பை ஆற்றில் அசுத்தம் அதிகரிக்கிறது. ஆறு அசுத்தமாவதைத் தடுக்கும் வகையில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சியக்காய் ஆகிய பொருட்களை குளிக்க பயன்படுத்தக் கூடாது என பத்தணந்திட்டா மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதை மீறும் பக்தர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்தியா முழுவதிலிருந்து வரும் பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த வருடமும் இதே போல் சோப்பு போட்டு குளிக்க தடைவிதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!