Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திவாகரன் கைது செய்யப்படுவாரா? பரபரப்பில் மன்னார்குடி சுந்தரக்கோட்டை

மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் பண்ணை வீடு, மன்னை நகரில் உள்ள மற்றொரு வீடு, அவருக்குச் சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 
இரண்டு நாட்களாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திவாகரனின் வீடுகளில் சோதனை செய்து முடித்துள்ள வருமானவரித்துறையினர். கல்லூரி, கல்லூரி விடுதியில் மட்டும் தற்போது பத்துக்கும் மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகள¢ சோதனை செய்து வருகின்றனர்.

திவாகரன்
இன்றுகாலை கல்லூரி வாளகத்தின் முன்பு திவாகரனின் ஆதரவாளர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளை வழிமறித்து எங்கே உங்கள் அடையாள அட¢டையை காட்டுங்கள், நீங்கள் வருமானவரித்துறை அதிகாரிளா? என¢று கேட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்கு எத¤ராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங¢கு பரபரப்பு ஏற்பட்டது. 
பின்னர், திவாகரனின ஆதரவாளர்கள் 17 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கல்லூரி வளாகத்தில் காசாளர் அன்புக்கரசி, கல்லூரியை நிர்வகித்து வந்த விநாயகம் ஆகியோர் இரண்டுநாட்களாக வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அன்புக்கரசியிடம் மேலும், மேலும் துருவித்துருவி விசாரித்து வருகின்றனர். தனக்கு தெரிந்த தகவல்களையும் இருவரும் தெரிவித்துள்ளதால், கல்லூரியில் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்கள் அதிகாரிகள். 
இந்நிலையில் திவாகரனை கைது செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வருமானவரித்துறையினர் செய்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அவருடைய ஆதரவாளர்கள் பரபரப்புடன் காணப்படுகிறார்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close