Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காயத்துடன் சுற்றும் யானை... கலங்கிய மக்கள்... களமிறங்கிய வனத்துறை!

கோவை, அருகே ஆனைகட்டியில், காலில் அடிப்பட்ட நிலையில் சுற்றிவரும் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

யானை

கோவையை அடுத்த, ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர் புதூர் பகுதியில், கடந்த சில நாள்களாக ஆண் யானை ஒன்று காலில் அடிபட்ட நிலையில் சுற்றி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலையில் ஊருக்குள் வந்த ஆண் யானை, கால்நடைகளை ஒன்றும் செய்யாமல் தொட்டியில் இருந்த தண்ணீரை மட்டும் குடித்து விட்டு மீண்டும் வனத்திற்குள் சென்றது.

இதையடுத்து, யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் சிகிச்சை அளிக்க யானையை தேடி வந்தனர். ஆனால், யானையை பார்க்க முடியவில்லை என வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கினறனர்.

எனவே, யானை மீண்டும் வந்தால் அதற்கான சிகிச்சை அளிக்க, யானை சென்ற வனப்பகுதியின் எல்லையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஒற்றை யானை அப்பகுதியில் இருப்பதால் மலைவாழ் மக்கள் பாதுகாப்போடு இருக்கமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது அடிபட்ட யானையை வனத்துறையினர் கண்டுபிடித்து சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர். வனத்துறை மருத்துவர் டாக்டர் மனோகரன் தலைமையிலான குழு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close