Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம்மோதி விவசாயி பலி..! அரவக்குறிச்சியில் நடந்த சோகம்

மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரது பாதுகாப்புக்கு வந்த போலீஸார் வாகனம் மோதி அரவக்குறிச்சி அருகே லெட்சுமணன் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தம்பித்துரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் அரசியல் எதிரியும், அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏவுமான செந்தில்பாலாஜி தொகுயில் இந்தச் சம்பவம் நடந்தது என்பதால், அவர் இவர்களை பழிவாங்க விசயத்தை பெரிதாக்குவார் என்ற பயத்தில் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போஸ்ட்மார்ட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட லெட்சுமணன் உடலை அவசரம் அவசரமாக கரூர் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொண்டு போகச்சொன்னதாக புதிதாக பரபர சர்ச்சை வெடித்திருக்கிறது.


நேற்று காலை அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராரபுரம் உள்ளிட்ட அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தம்பிதுரையும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் காரில் சென்றனர். நடுவில் கட்சிகாரரர் ஒருவர் இல்ல திருமணத்திலும் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு படுவேகமாக காரில் பயணித்தனர். இதனால், அவர்களுக்கு பாதுகாப்புக்கு போன எஸ்கார்டு வண்டியும் வேகமாகச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்படி ஒரு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மற்றொரு அரசு நிகழ்ச்சிக்கு தம்பிதுரையும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பள்ளப்பட்டியில் இருந்து அரவக்குறிச்சி நோக்கிச் சென்றபோதுதான், பூலாம்வலசு பெட்ரோல் பங்க் அருகே அந்த விபத்து நடந்தது. அவர்களின் கார்களுக்கு பின்னே கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்த எஸ்கார்டு வாகனம், சாலை ஓரம் மோட்டார் சைக்கிளில் சென்ற லெட்சுமணன் என்ற விவசாயி மீது படுபயங்கரமாக மோதியது. மோதப்பட்ட வேகத்தில் தூக்கி எறியப்பட்ட அவர், துள்ளத்துடிக்கச் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனால், அந்த விபத்தை கண்டும் காணாமலும் தம்பிதுரை, அமைச்சர், எஸ்கார்டு வண்டிகள் பறந்தன. 
மேற்கொண்டு நடந்தவற்றை அந்தப் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் விவரிக்கிறார். மோதிய வேகத்தில் லெட்சுமணன் இறந்துவிட்டார். இறந்த அவர் அருகில் உள்ள குறிக்காரன்வலசு பகுதியைச் சேர்ந்தவர். இறந்த அவர் உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், தம்பிதுரையும், அமைச்சரும் பிரச்னை ஆகும்ன்னு நிற்காமல் போறாங்கன்னு ஆரம்பத்தில் நினைச்சோம். ஆனால், அப்புறம்தான் உண்மையே தெரிஞ்சுச்சு.

இறந்த லெட்சுமணன் உடலை கூராய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனாங்க. அங்கு உள்ள டாக்டர்கள் அமைச்சரின் எஸ்கார்டு வண்டி மோதி இவர் இறந்திருக்கார்ன்னு தெரிஞ்சதும் கூராய்வு பண்ண தயங்கினாங்க. மக்கள் சத்தம் போடவும் கூராய்வு பண்ண போனாங்க. ஆனால், அதற்குள் டாக்டர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போன் வந்திருக்கு. 'இங்கு இறந்தவர் உடலை வைத்திருந்தால், உறவினர்களால் பிரச்னை ஆகும். அதோடு, இது செந்தில்பாலாஜி தொகுதி. அவர்  மக்களை தூண்டிவிட்டு, இந்தப் பிரச்னையை எங்களுக்கு எதிராக பெரிதாக கிளப்ப முயல்கிறாராம்.

அதனால் உறவினர்கள் அதிகம் பேர் குவிவதற்குள் இறந்தவர் உடலை கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போயிடுங்க. அங்க கொண்டு போனா, எந்தப் பிரச்னையும் வராமல் பாத்துக்கலாம். உடனே அனுப்பி வையுங்க'ன்னு சொல்லி இருக்கிறார். அதனால்,இறந்த லெட்சுமணன் உடலை அவசரகதியில் மூட்டையாக கட்டி நாற்பது கிலோமீட்டர் தள்ளி உள்ள கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வச்சாங்க. தங்களது பாதுகாப்பு வண்டி மோதி விவசாயி ஒருவர் அநியாயமாக இறந்திருக்கிறார் என்று கொஞ்சமும் பதைக்காமல், இறந்தவரின் உறவினர்களுக்கு ஆறுதலும் சொல்லாமல் ,தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, அரசியல் எதிரி செந்தில்பாலாஜி இந்த விசயத்தை தங்களுக்கு எதிராக திசைதிருப்புவார் என்ற பயத்தில் கரூருக்கு கொண்டு போக வைத்து கொடுமை பண்ணி இருக்கிறார்கள். 

தம்பிதுரையும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும், லெட்சுமணனின் உறவினர்களையும் கரூர் வரையில் அலைக்கழித்திருக்கிறார்கள். அப்பாவி ஒருவரின் உயிரோடு விளையாண்டது மட்டுமல்லாமல், அவரின் இறந்த உடலை வைத்து 'அரசியலும்' பண்ணி இருப்பதுதான் எங்களைக் கொதிக்க வைத்துவிட்டது. செந்தில்பாலாஜி இந்த விசயத்தை பெருசாக்குகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக நாங்க இந்த விசயத்தை பெரிசாக்கலாம்ன்னு இருக்கோம். போக்குவரத்துத்துறை அமைச்சரின் எஸ்கார்டு வண்டியே போக்குவரத்து சட்டத்திட்டத்தை காற்றில் பறக்கவிட்டு அப்பாவி உயிரை காவு வாங்கி இருக்கிறார்கள்.

ஆனால்,இருவரும் இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூட சொல்லவில்லை. அதனால்,இந்த விவகாரத்தில் லெட்சுமணன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை இந்த விசயத்தை நாங்க அவ்வளவு சீக்கிரத்தில் விடுவதாக இல்லை" என்று பொங்கினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close