தமிழக காவல்துறையில் 81 டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்!

டி எஸ் பி, dsp

மிழக காவல்துறையில் 81 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 81 டி.எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, காவல்துறை வட்டாரத்தை பெரிதும் கவனிக்க வைத்துள்ளது.

மதுரை (தெற்கு) டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த கலைச்செல்வன், சென்னை பெருநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளராக சுஷில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கம் சரக உதவி ஆணையராக பணியாற்றி வந்த தொல்காப்பியன், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!