வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (11/11/2017)

கடைசி தொடர்பு:08:30 (11/11/2017)

பாளையங்கோட்டை சிறையில் முகிலன் உண்ணாவிரதம்..!

பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழலியலாளர் முகிலன் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். 


தமிழகத்தின் மிக முக்கிய சூழலிலியல் போராளியும் அணு உலைப் போராட்டத்தில் பங்கேற்ற முகிலன் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் உள்ள அவர், சில கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். 
அவரது கோரிக்கைகள்:
1) கூடங்குளத்தில் ஒரு லட்சம் பேர் மீது போடப்பட்ட 132 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.
2)தாமிரபரணி ஆற்றில் கோக், பெப்சி ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
3)தாமிரபரணியில் கொங்கராய்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய மணல் குவாரிகள் அமைப்பதற்கான முயற்சியை கைவிட வேண்டும்.
4)வழக்கறிஞர் செம்மணி மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5)இஸ்ரோ தொடர்பான செய்தி வெளியிட்ட  தினகரன் பத்திரிக்கையாளர் அந்தோனி ஜெகன், புதியதலைமுறை செய்தியாளர் ரஜூ கிருஷ்ணா மற்றும் நாகராஜன் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
6)பேராசிரியர் த.செயராமன் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
7)கார்ட்டூனிஸ் பாலா மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
8)தமிழகத்தில் கெயில், ஹைட்ரோகார்பன், அணு உலை, மணல் கொள்ளை, நிலத்தடி நீர் கொள்ளை போன்றவற்றை எதிர்த்து வாழ்வாதாரத்திற்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
9)திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மேற்கொள்ளப்படும்  ஆய்வை தடை செய்ய வேண்டும்.