நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேர்தல் ஆணையர் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலச் செயலாளர் ஆகியோர் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்

உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கான பதவிக் காலம், கடந்த மே மாதத்துடன் முடிவடைந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தலை கடந்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் நடத்த வேண்டும் என்று தேர்தலை தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதா உடல்நிலைக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன்பின்னர், தமிழக அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், தொடர்ச்சியாக காலம் தாழ்த்திவருகிறது. இதற்கிடையில், செப்டம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில், தமிழக அரசுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் எதிராக, தி.மு.க சார்பில் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், செப்டம்பர் 18-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற உத்தரவைப் பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர், தமிழகத் அரசு மீதும் மாநிலத் தேர்தல் ஆணையம் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, தமிழகச் செயலாளர் மற்றும் மாநில தேர்தல் ஆணையர் ஆகியோரை நவம்பர் 14-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!