வெளியிடப்பட்ட நேரம்: 10:09 (11/11/2017)

கடைசி தொடர்பு:10:42 (11/11/2017)

கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! - கேபிள் டிவி ஆபரேட்டர்களை எச்சரிக்கும் அமைச்சர் 

'தமிழக அரசின் இலவச செட்டாப் பாக்ஸ் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆபரேட்டரின் உரிமம் ரத்துசெய்யப்படும்' என்று தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் எச்சரித்துள்ளார்.

மணிகண்டன்

Representational Image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், நேற்று பள்ளியொன்றில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மணிகண்டன் பங்கேற்றார். அப்போது, அரசின் இலவச கேபிள் இணைப்புகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த மணிகண்டன், ‘தமிழகத்தில் கேபிள் டிவி இணைப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன. இதற்காக, மொத்தம் 70.52 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளன. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்ஸை பொருத்த, பல இடங்களில் ரூ.500 முதல் ரூ.700 வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆக்டிவேஷன் கட்டணமாக ரூ.200 மட்டுமே வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்துசெய்யப்படும்’ என்று எச்சரித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க