Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கமல் நிலைப்பாட்டில் ஒரு தெளிவும் இல்லை!' - விமர்சிக்கும் தமிழிசை

'கமலின் நிலைப்பாட்டில் தெளிவே இல்லை' என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

கமலின் அரசியல் பிரவேசம்குறித்து  பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், “கமலின் அரசியல் பிரவேசத்துக்கு முன்பே, தமிழக அரசியலில் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் என்று யூகிப்பது சரியாக இருக்காது. கமல், ஊழல் மற்றும் மதவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவர் முதலாவதாக கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தார். கேரளாவில், கடந்த ஓராண்டு காலத்தில் 14 இந்து இயக்கத்தினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோல சிவப்புத் தீவிரவாதம் நடக்கும் ஒரு மாநில முதல்வரை கமல் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு எதிர்ப்புக் கிளம்பியதும், உடனடியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார். மம்தா, சாரதா சிட்ஃபண்ட்ஸ் ஊழலில் சிக்கித் தவித்துவருகிறார். அதேபோல, அவரது கருத்துகளும் கண்டனங்களும் ஒரு தலைபட்சமாக சுயநலம் சார்ந்தே உள்ளதால், அவரது நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ளாத கருத்து என்பதால், பா.ஜ.க-வுக்கு அவர்குறித்த எந்தக் கவலையும் இல்லை.''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close