வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (11/11/2017)

கடைசி தொடர்பு:15:28 (11/11/2017)

#DemonetizationAnthem எதிரொலி - சிம்பு வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு

சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள நடிகர் சிம்புவின் வீட்டிற்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

simbu
 

நவம்பர் 8-ம் தேதி #DemonetizationAnthem என்னும் பெயரில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து, பாடல் ஒன்று வெளியானது. பண மதிப்பிழப்பு மட்டுமன்றி  ஜி.எஸ்.டி குறித்தும் விமர்சித்திருந்தனர். அந்தப் பாடலை எழுதியவர், கபிலன் வைரமுத்து. விரைவில் வெளியாக உள்ள  ’தட்ரோம் தூக்குறோம்’ என்னும் படத்தின் இப்பாடலை, நடிகர் சிம்பு பாடியுள்ளார் என்பதுதான் ஹைலைட்.  கறுப்புப்பணம், விஜய் மல்லையா எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச்சென்றுள்ளது பாடல் வரிகள்.

 

 

இந்தப் பாடலைப் பாடிய சிம்புவுக்கு எதிராக, பா.ஜ.க தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'மெர்சல்' படத்துக்கு எதிராக எழுந்த அதே கோஷங்கள், தற்போது சிம்புவின் #DemonetizationAnthem பாடலுக்கு எதிராகவும் எழத் தொடங்கிவிட்டன. இதனால், சிம்புவின் வீட்டை பா.ஜ.க-வினர் முற்றுகையிட வாய்ப்புள்ளதாகக் கூறி, அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

simbu
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க