வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (11/11/2017)

கடைசி தொடர்பு:15:55 (11/11/2017)

”பிரதமர் மோடி நமக்காக நேரம் ஒதுக்கினார்!”: முதல்வர் பழனிசாமி 'அடடே' பேட்டி

”பிரதமர் மோடி, நேரம் ஒதுக்கி மழை பாதிப்புகளைக் கேட்டறிந்தார்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி

தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும் இந்நேரத்தில், மழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றுவருகிறது. தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையின் 10-வது தளத்தில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுத்துறை செயலாளர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகின்றன. மேலும், வரவிருக்கும் பருவமழை தொடர்பான பாதிப்புகள், அதற்கு முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மக்களுக்கு அளிக்கவேண்டிய பாதுகாப்புகள்குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பருவமழை முடிந்த பின்னர்தான் முழுமையான பாதிப்புகள்குறித்துத் தெரியவரும். பிரதமர் நேரம் ஒதுக்கி, நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கேட்டறிந்தார். விரைவில் மழை நிவாரணத்துக்கான மத்திய அரசின் உதவி, தமிழகத்துக்குக் கிடைக்கும்” என்று கூறினார்.