Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கழிப்பிட வசதியே இல்லை; திறந்தவெளியில்தான் மலம் கழிக்கிறோம்'- கலெக்டர் ரோகிணியிடம் பொங்கிய பொதுமக்கள்

Salem: 

சேலம் கலெக்டர் ரோஹிணி, இன்று காலை ஆத்தூர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறும் டெங்கு விழிப்புஉணர்வு முகாமிற்குச் செல்லும்போது, ஆத்தூர் முல்லை நகரில் இறங்கி, வீடு வீடாக டெங்கு கொசு இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டதால், ரோஹிணி மிரண்டுபோய் ஓட்டம்பிடித்தார்.

இதுபற்றி முல்லைநகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், '' சேலம் கலெக்டர், ஆத்தூரில் நடக்க இருந்த டெங்கு விழிப்பு உணர்வு முகாமிற்காகச் செல்லும் வழியில் உள்ள எங்க பகுதியில், நேற்று  இறந்துபோன முதியவரின் ப்ளெக்ஸ் பேனர் ரோட்டில் வைக்கப்பட்டிருந்தது. டெங்கு காய்ச்சலில் அவர் இறந்திருப்பாரோ என்று சந்தேகப்பட்டு, எங்க முல்லை நகரில் இறங்கி, வீடு வீடாக குடிநீரை ஆய்வுசெய்து, கொசு இருப்பதாகச் சொல்லி அந்தத் தண்ணீரை கீழே ஊற்றினார். ஒரு கட்டத்தில் பெண்கள், ஆண்கள் அனைவரும் ஒன்று திரண்டு, குடிக்கிற நீரை இப்படி கீழே ஊற்றுகிறீர்களே இது நியாயமா? தண்ணீரில் கொசு இருக்கிறது என்றால் இருக்கத்தான்செய்யும். இந்த இடத்தின் பெயர் கலைஞர் காலனி 4-வது வார்டு. இந்தப் பகுதியில் கழிப்பிடம் வேண்டும் என்று பல வருடமாக போராடியது மட்டுமல்ல, சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தும் போராடினோம். இது நாள் வரை கழிப்பிட வசதி செய்து தரவில்லை. அதனால், திறந்தவெளியில் மலம் கழிக்கிறோம்.

நகராட்சியில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விடுகிறார்கள். நாங்களும் 3 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாட்டி பார்த்துவிட்டோம். தொடர்ந்து 15 நாள்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விடுகிறார்கள். அப்புறம், குடிக்கிற நீரில் புழு இல்லாமல் என்ன செய்யும். நாங்க விலை போட்டு வாங்கி குடிக்கிற அளவுக்கு வசதியானவர்கள் கிடையாது. எங்க பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் யாரும் வருவதில்லை. சாக்கடையைத் தூர் வாரியதே கிடையாது. அதனால், இப்பகுதியே துர்நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ கலெக்டருங்க சேலம் மாவட்டத்தில் இருந்திருக்காங்க. ஆனால், நீங்க மட்டும்தான் எங்க வீன்டுக்கு வந்திருக்கிறீங்க. ரொம்ப மகிழ்ச்சி. ஆனா,  அடிப்படை வசதி எதுவும் செய்துகொடுக்காம, ''டெங்கை ஒழிக்கிறேன்; தேவாங்கு பிடிக்கிறேன்னு'' வர்றதை எங்களால ஏத்துக்க முடியாது'' என்று சரமாரியாக பொதுமக்கள் கேள்விகளை கேட்டுக் கூச்சலிட, கலெக்டர் மிரண்டு போய், 'நான் டெங்கு ஆய்வு செய்ய மட்டும்தான் வந்தேன்' என்று கூறிக்கொண்டே காரில் ஏறிச் சென்றுவிட்டார்'' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close