வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/11/2017)

கடைசி தொடர்பு:22:00 (11/11/2017)

நளினி விடுதலைக்காக இயக்கம்! - வழக்கறிஞர் பேட்டி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் நளினியை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கக்கோரி விடுதலை இயக்கம் ஒன்றை துவங்கப்போவதாக அவருடைய வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.

Nalini


இதுசம்பந்தமாக வழக்கறிஞர் புகழேந்தி பேசுகையில், “நளினி மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் வேண்டும் என்று நளினி தாக்கல் செய்த வழக்கு  வரும் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.  நளினி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று உயர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மூன்று வழக்குகள் அடுத்த வாரம் இறுதியில் விசாரணைக்கு வருகின்றன.  27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்  நளினியை விடுதலை செய்ய  "Release Nalini movement" என்ற இயக்கத்தை வரும் டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமை  நாளில் தொடங்க  உள்ளோம். இதன்மூலம்  பெண்கள் அமைப்புகள் ஆதரவுடன் நளினியின் விடுதலையை இந்திய, தமிழக அரசுகளுக்கு வழியுறுத்துவோம்” என்றார்.