வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (11/11/2017)

கடைசி தொடர்பு:21:26 (11/11/2017)

`என்னை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தார்!' - கருணாநிதியை சந்தித்தப் பிறகு நல்லக்கண்ணு நெகிழ்ச்சி!

தி.மு.க தலைவர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. அவருடன் முத்தரசனும் உடனிருந்தார்.

கருணாநிதியைச் சந்தித்த நல்லக்கண்ணு

தி.மு.க-வின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பல மாதங்களாக தீவர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். அவரை பல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் நேரில் சென்று சந்தித்து, நலம் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, சில நாள்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி, கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணு, கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நல்லக்கண்ணு, `கருணாநிதியை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தார்' என்று கூறினார். இந்த சந்திப்பின் போது, இந்திய கம்யூனிஸ்ட்டின் முத்தரசனும் உடனிருந்தார்.