வெளியிடப்பட்ட நேரம்: 21:58 (11/11/2017)

கடைசி தொடர்பு:22:53 (11/11/2017)

வங்கிக் கணக்கை ஹேக் செய்து நூதன கொள்ளை: அதிர்ச்சியில் கோவை!

கோவையில், வங்கிக் கணக்கை ஹேக் செய்து, 12 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேக்கிங்

கோவை, என்.ஜி.ஜி.ஒ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். துடியலூரில் இயங்கி வரும், ஶ்ரீ பரம சக்தி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின், நிர்வாக இயக்குநராக  இருந்து வருகிறார். இந்நிலையில், மர்ம நபர்கள் சிலரால் இவரின் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆறுமுகம், "எனது மெயில் ஐ.டி-யை முதலில் ஹேக் செய்து, அதில் இருந்து சில ஆவணங்களை திருடியுள்ளனர். பின்னர், அந்த ஆவணங்களை வைத்து, எனது செல்போன் எண்ணை ட்யூப்ளிகேட்டாக எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் எனக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது.

அந்த செல்போன் எண்ணைத்தான் எனது வங்கி பரிவர்தனைக்கு பயன்படுத்தி வந்தேன். எனவே வங்கிக்கு அழைத்தபோது, RTGS பரிவர்த்தனை மூலம் 12.75 லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. உடனடியாக சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தேன். எனக்கு, போலீஸில் இருந்து சப்போர்ட் செய்கிறார்கள். ஆனால், வங்கியில் இருந்து எந்த விதமான உதவியும் செய்யவில்லை" என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து, சைபர் க்ரைம் போலீஸார் நேற்றுதான் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.