`தியேட்டர்களில் தேசிய கீதம் அவசியமில்லை' - கமல் பளீச்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கும் முனைப்போடு தீவரமாக செயல்பட்டு வருகிறார். அவர் தொடர்ந்து மாநில முதல்வர்கள் பலரை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு இன்று அவர் பேட்டியளித்தார். 

கமல்ஹாசன்

அப்போது, தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படுவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல், `தியேட்டர்களில் தேசிய கீதம் தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். தேசிய கீதம் போடப்பட்டாலும், ஒருவரை வலுக்கட்டாயமாக எழும்பச் சொல்வது கூடாது. அப்படி ஒருவர் எழும்பவில்லை என்றால், அவரைத் தாக்குவது தவறு. ஏனென்றால், தியேட்டர் என்பது பொழுதுபோக்குக்கான ஒரு இடம். அந்த இடத்தில் தேசிய கீதம் போட்டு தேசப்பற்றை உறுதிபடுத்த வேண்டிய தேவையில்லை. தேசிய கீதத்தை ஒலிபரப்ப முடிவெடுத்துவிட்டால், நாடாளுமன்றத்தில்தான் முதலில் ஒலிபரப்ப வேண்டும்' என்றவரிடம், `ரஜினியுடன் அரசியல் பாதையில் பயணிப்பீர்களா?' என்ற கேட்கப்பட்டது, `அவரின் தத்துவமும் என்னுடைய தத்துவமும் ஒன்றாக இருக்கும் என சொல்வதற்கில்லை. எங்கள் அரசியல் அறிக்கை ஒன்றாக இருக்கும்பட்சத்தில் இணைந்து வேலை செய்யலாம். இந்தியாவில் 2000 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. நான் ஒரு புதிய கட்சியைத் தொடங்க உள்ளேன். ரஜினியும் ஒரு புதிய கட்சியைத் தொடங்க உள்ளார் என்றால், அவருக்கு வாழ்த்துகள்' என்று முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!