வெளியிடப்பட்ட நேரம்: 04:34 (12/11/2017)

கடைசி தொடர்பு:12:15 (29/06/2018)

திருவாரூர் திவாகரன் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு

திவாகரன், divakaran

சசிகலா, தினகரன், திவாகரன், விவேக் உட்பட சசி சொந்தங்களின் அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று நாள்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமாக திருவாரூரில் உள்ள பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.

திவாகரன், divakaran

சுந்தரகோட்டையில் உள்ள திவாகரனின் வீட்டில் அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், விசாரணை முடிந்து அதிகாரிகள் வெளியே வந்தனர். மேலும், திவாகரனின் செங்கலமலத்தாயார் கல்லூரியில் 60 மணி நேரத்துக்கு மேலாக ரெய்டு நடந்தது. அங்கிருந்து ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திவாகரன், divakaran

மேலும், கோயம்புத்தூரில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர் சஜீவன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வந்தது. சசிகலாவின் வழக்கறிஞர் செந்திலின் நாமக்கல் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த இரண்டு சோதனைகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. இங்கிருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது,