வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (12/11/2017)

கடைசி தொடர்பு:05:00 (12/11/2017)

சென்னையில் தாறுமாறாக ஓடிய சொகுசுகார் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி

சென்னையில் தறிகெட்டு ஓடிய சொகுசுகார், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. தேனாம்பேட்டை, கதீட்ரல் சாலையில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தச் சம்பவத்தில் சாலையில் நின்றிருந்த சில ஆட்டோக்கள் நொறுங்கின. மேலும், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் அரக்கோணத்தைச் சேர்ந்தவர். சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் சொகுசுகாரை அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்துவது சென்னையில் அடிக்கடி நடந்துவரும் சம்பவமாக மாறிவிட்டது.