வெளியிடப்பட்ட நேரம்: 09:47 (12/11/2017)

கடைசி தொடர்பு:09:47 (12/11/2017)

”அ.தி.மு.க-வை அழிக்க எந்தக் கட்சிக்கும் வலிமை கிடையாது”: தம்பிதுரை

"அ.தி.மு.க-வை அழிக்க எந்தக் கட்சிக்கும் வலிமையும் சக்தியும் கிடையாது” என எம்.பி. தம்பிதுரை கூறினார்.

தம்பிதுரை

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், நான்காம் நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி என 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. நான்காவது நாளாக இன்று சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் தம்பிதுரை எம்.பி கூறுகையில், “சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடத்தப்படும் சோதனை பற்றி வருமானவரித்துறையிடம் கேட்க வேண்டும். அ.தி.மு.க-வை அழிக்க எந்தக் கட்சிக்கும் வலிமையும், சக்தியும் கிடையாது. ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டிருப்பதே அ.தி.மு.க-வுக்கு கிடைத்த வெற்றி தான்” என்றார்.