”காந்தியின் பெயரைக் கூறக்கூட டிடிவி தினகரனுக்குத் தகுதியில்லை”: கே.பி.முனுசாமி | K.P.Munusamy comments over TTV Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (12/11/2017)

கடைசி தொடர்பு:11:18 (12/11/2017)

”காந்தியின் பெயரைக் கூறக்கூட டிடிவி தினகரனுக்குத் தகுதியில்லை”: கே.பி.முனுசாமி

”காந்தியின் பெயரைக் கூறக்கூட டிடிவி தினகரனுக்குத் தகுதியில்லை” என ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

முனுசாமி

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், நான்காம் நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி என 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. நான்காவது நாளாக இன்று சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி அளித்துள்ள பேட்டியில், “சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜெயலலிதாவை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சொத்துகளை சசிகலா குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். மேலும் சசிகலா உறவினர்கள் வீடுகளில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததாகவும் தகவல்கள் வருகின்றன. காந்தியின் பேரன் இல்லை என்று மட்டும் அல்ல, ’காந்தி’ என்ற பெயரைக் கூறக் கூட டிடிவி-க்கு தகுதியில்லை” எனக் கூறினார்.