வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (12/11/2017)

கடைசி தொடர்பு:11:50 (12/11/2017)

”குஜராத் தேர்தலுக்காக ஜி.எஸ்.டி வரி குறைப்பு”: ஸ்டாலின் குற்றச்சாட்டு

”குஜராத் தேர்தலுக்காக ஜி.எஸ்.டி வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் ”மக்கள் அதிகம் பயன்படுத்தும் 213 பொருட்களுக்கான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது” என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். 

இந்நிலையில் ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அவசர கதியில் அமல்படுத்தப்பட்டதால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், வணிகர்கள், சிறு மற்றும் குறு தொழில் செய்வோர் அனைவரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பியபோதெல்லாம் அமைதி காத்தது மத்திய பா.ஜ.க. அரசு. ஆனால், தற்போது குஜராத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது” எனக் கூறியுள்ளார,.