பாளையங்கோட்டை சிறையில் முகிலன் 2-வது நாளாக உண்ணாவிரதம்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள சமூகச் செயற்பாட்டாளரான முகிலன் 2-வது நாளாக இன்று உண்ணாவிரத்தத்தை தொடர்கிறார். 

முகிலன்

மக்களுக்கு எதிரான திட்டங்களை கடுமையாக எதிர்க்கும் சமூகப் போராளியான முகிலன் மீது கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது தொடரப்பட்ட வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 11-ம் தேதி முதல் அவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார். 

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தாமிரபரணி தண்ணீரை வழங்கக் கூடாது. தாமிரபரணி ஆற்றில் புதிதாக மணல் குவாரி தொடங்கக் கூடாது, வழக்கறிஞர் செம்மணி தாக்குதலுக்குக் காரணமான போலீஸார்  மீது வழக்குத் தொடர வேண்டும், செய்தியாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அவரிடம் சிறைத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இன்றும் அவர் 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நெல்லையில் நடைபெறும் நிலையில், முகிலன் உண்ணாவிரதத்தைத் தொடர்வது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!