”தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்முறை அதிகரிக்கும்”: செல்லூர் ராஜு

”தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்முறை அதிகரிக்கும்” என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜு

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், நான்காம் நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. இதையடுத்து, தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவராக ‘இந்த வருமானவரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என தொடர்ந்து வரிசையாகப் பேட்டி அளித்துவந்தனர்.

இந்நிலையில், தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு அளித்துள்ள பேட்டியில், “ஜெயலலிதா ஆட்சியில் தவறு செய்யும் அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்முறை அதிகரிக்கும். மேலும், தி.மு.க உடன் யார் கூட்டணி அமைத்தாலும் அவர்களும் எங்கள் எதிரிதான்” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!