”எதிர்கட்சிகளுக்குப் பயம்”: ஐ.டி ரெய்டு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

”எதிர்கட்சிகள் பயம் காரணமாகவே வருமான வரித்துறையின் சோதனையை விமர்சித்து வருகின்றனர்” என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன்.ராதா

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், நான்காம் நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி என 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. நான்காவது நாளாக இன்று சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

இதுகுறித்து ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் பல தரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரியை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். தற்போதும் வரவேற்கவும் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரிசோதனைக்கு பா.ஐ.க. காரணம் அல்ல. வருமான வரித்துரையினருக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்ரு வருகிறது. மேலும் தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் அனைவரும் வருமான வரி சோதனையை எதிர்ப்பது அவர்களின் பயத்தைக் காட்டுகிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!