வெளியிடப்பட்ட நேரம்: 01:45 (13/11/2017)

கடைசி தொடர்பு:08:44 (13/11/2017)

தொடங்கியது ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த்தின் 67-வது பிறந்தநாள், டிசம்பர் மாதம் 12-ம் தேதி வருவதையொட்டி, அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ரஜினி

நேற்று, ட்விட்டரில் அவரது ரசிகர்கள் 1 MONTH FOR THALAIVAR BIRTHDAY என்ற டேக் லைன் ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமீபத்தில், அவரது நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள `2.0' திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. இந்த நிலையில், அவரது பிறந்தநாளன்று 2.0 படத்தின் டிரைலர் வெளிவரலாம் என ரசிகர்கள் ட்விட்டுகளின் மூலம் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்திவருகின்றனர். இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில், அப்படத்தின் டீசர் வெளிவரலாம் என்றும் மற்றொரு தரப்பினர் ட்வீட்டி  இருக்கிறார்கள். பெரிய நடிகர்களின் பிறந்தநாளில், வழக்கமாக அவர்கள் நடித்த படங்களின் டீசர், டிரைலர் வெளிவருவது சமீப காலமாக ட்ரெண்ட் ஆக இருப்பதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

நவம்பர் 7-ம் தேதி தனது பிறந்தநாளின்போது, நடிகர் கமல்ஹாசன் 'ஆப்' என்ற அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.