மூன்று மாவட்டங்களுக்கு மட்டுமே மழை - `தமிழ்நாடு வெதர்மேன்' ஆரூடம் | Even next three days, this three district will alone has the possibility of getting rains, Tamil Nadu Weatherman

வெளியிடப்பட்ட நேரம்: 07:10 (13/11/2017)

கடைசி தொடர்பு:08:12 (13/11/2017)

மூன்று மாவட்டங்களுக்கு மட்டுமே மழை - `தமிழ்நாடு வெதர்மேன்' ஆரூடம்

கடந்த சில நாள்களாக சென்னையில் ஓய்ந்திருந்த மழை, நேற்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இதுகுறித்து `தமிழ்நாடு வெதர்மேன்', தனது முகநூல் பக்கத்தில், `அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும்' என்று தெரிவித்துள்ளார்.

மழை

 மேலும், `தமிழகத்தின் வடக்குப் பகுதியில்தான் மழைக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. எண்ணூரில் 70 மி.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 50 மி.மீ மழையும் பெய்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரைத் தவிர வேறெங்கும் மழை பொழியவில்லை. அடுத்த மூன்று நாள்களுக்கும் இந்த மூன்று மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளார். நேற்று இரவு முதல் சென்னையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.